அமெரிக்கா வரும் இந்தியப் பிரதமரை வார்த்தைக்கு வார்த்தை பிரதமர் என புகழும் அமெரிக்க நடிகை
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதைத் தொடர்ந்து பல நாடுகள் மீது வரிகள் விதிப்பது குறித்து பேசிக்கொண்டிருக்கும் விடயம் உலகையே பரபரப்படையச் செய்துள்ளது.
இந்நிலையில், இன்று அமெரிக்காவுக்கு வருகை புரிந்துள்ளார் இந்தியப் பிரதமர் மோடி.
அரசியல்வாதிகள் முதல் பல்வேறு பிரபலங்கள் இந்திய பிரதமரின் அமெரிக்க வருகை முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியுள்ளார்கள்.
இந்நிலையில், இந்தியப் பிரதமரை, வார்த்தைக்கு வார்த்தை பிரதமர், பிரதமர் என அமெரிக்க நடிகையும் பாடகியுமான ஒருவர் புகழும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியப் பிரதமரை ஓயாமல் புகழும் அமெரிக்க நடிகை
ஆப்பிரிக்க அமெரிக்க நடிகையும், பாடகியுமான மேரி மில்பென் என்பவர்தான் இந்தியப் பிரதமர் மோடியை அப்படி ஓயாமல் புகழ்ந்துள்ளார்.
#WATCH | Washington, DC: On PM Modi's US visit, African-American actress and singer Mary Millben, says, " It is wonderful that PM is going to be back in the US, arriving today. PM was here in 2023 for his arrival visit. I sang Indian National Anthem for PM and my beloved Indian… pic.twitter.com/oyNvU8rtHy
— ANI (@ANI) February 12, 2025
ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த மேரி, பிரதமர் மீண்டும் அமெரிக்கா வருவது மிகவும் மகிழ்ச்சி.
பிரதமர் 2023இல் அமெரிக்கா வரும்போது நான் பிரதமருக்காகவும், என் அன்பிற்குரிய இந்திய அமெரிக்க சமுதாயத்துக்காகவும், இந்திய தேசிய கீதத்தைப் பாடினேன்.
அவர் மீண்டும் அமெரிக்கா வருவது உற்சாகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
பெரும் வெற்றி பெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமரும், அதேபோல சமீபத்தில் பெறும் வெற்றிபெற்ற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் என இந்த இரண்டு பெரும் தலைவர்களும் இன்று இங்கு சந்திக்கிறார்கள் என்று கூறியுள்ளார் மேரி.
இப்படி வார்த்தைக்கு வார்த்தை இந்தியப் பிரதமரை பிரதமர், பிரதமர் என கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், இந்தியா அமெரிக்காவின் முக்கிய கூட்டாளர் என்றும், தற்போது சந்தித்துவரும் சில சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கூறியுள்ளார் மேரி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |