அடுத்த ஜென்மத்துல மகனா பிறக்கணும்னு சொன்னார்! மாணிக்க விநாயகம் மரணம் குறித்து ராஜலெட்சுமி உருக்கம்
பிரபல பின்னணி பாடகியான ராஜலட்சுமி பாடகர் மாணிக்க விநாயகம் குறித்து சில தகவல்களை வேதனையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவர் குறித்து பிரபல நாட்டுப்புற பாடகியான ராஜலட்சுமி ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், மாணிக்க விநாயகம் அய்யா எங்களின் மானசீக குரு, அவரை நாங்கள் அப்பா என்று தான் சொல்லுவோம். நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, வேதாரண்யத்தில் நிகழ்ச்சி ஒன்றில்பாட்டு பாடினேன்.
அப்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அப்பா மாணிக்க விநாயகம். மேடையில் வந்து ரெம்ப நல்லா பாடுனா, கண்டிப்பா பெரிய ஆளா வருவ என்று கூறினார். அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டியில் அப்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அதில் என் கணவர் பாடல் பாடி முடித்தவுடன், அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் உனக்கு நான் மகனாக பிறக்க வேண்டும் என்று கூறினார்.
இதைக் கேட்டவுடன் எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. எங்களை அவர் எங்கு பார்த்தாலும் விளையாட்டு தனமாக இருந்துவிடாதீர்கள், காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று அடிக்கடி கூறுவார்.
இப்போது அவர் இல்லை என்று நினைக்கும் போது, மிகவும் கவலையாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022