என் கணவர் சேடிஸ்ட்! வாழ்வில் ஓரளவு தான் வலி தாங்கமுடியும்... பிரபல பாடகி வேதனை
பிரபல பின்னணி பாடகி விஜயலட்சுமி கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
வைக்கம் விஜயலட்சுமி
பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி கண் பார்வையை இழந்தவர் ஆவார். ஆனால் அதை அவர் பொருட்படுத்தாமல் தனது அழகான குரலால் முன்னணி பாடகியாக திகழ்கிறார்.
கடந்த 2018ல் அனூப் என்பவருடன் விஜயலட்சுமிக்கு திருமணம் நடந்தது. மகிழ்ச்சியுடன் திருமண வாழ்க்கையை துவக்கினார் விஜயலட்சுமி. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே தம்பதிக்கு இடையே மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றது.
அவர் ஒரு சேடிஸ்ட்
இந்நிலையில் சினி உலகம் நடத்திய "மனிதி வா" என்ற நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி கலந்து கொண்டு பேசினார். அதில், எனக்கு கல்யாணமாகிய பிறகு, வாழ்க்கை மிகவும் கண்ணீர் நிறைந்திருந்ததாகிவிட்டது.. நான் பாடிய பாடல்களை எல்லாம் விமர்சனம் செய்தார் என் கணவர் மேரி அனுப் எனக்கு பல நிபந்தனைகளை விதித்தார்..
அவர் ஒரு சேடிஸ்ட் போல நடந்து கொண்டார். எப்போதுமே என்னுடைய குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டுவதை முழுநேர பணியாக என் கணவர் வைத்திருந்தார்.
எப்போதும் அழுது கொண்டே இருந்தேன், என் பெற்றோரை என்னிடம் இருந்து பிரித்தார். வாழ்க்கையில் ஓரளவுக்குத்தான் வலியை தாங்க முடியும். ஒருவருக்கு பல்லில் வலி ஏற்பட்டால் அதனை பொறுத்துக்கொள்ளலாம் ஆனால், அதே வலி அதிகமானால், அந்த பல்லை பிடுங்குவதை தவிர வேறு வழியில்லை என கூறினார்.