இளவரசர் ஹரி என்னுடைய ஆள் என்று கூறிய பாடகி: வன்மம் வைத்திருக்கும் மேகன்...
இளவரசர் ஹரி என்னுடைய ஆள் என தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறிய பாப் பாடகி ஒருவரைக் குறித்தும், அவர் மீது மேகன் வன்மம் வைத்திருப்பதைக் குறித்தும் கூறும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஹரி என்னுடைய ஆள்
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல பாப் பாடகியான Katy Perry மற்றும் மற்றொரு பாடகியான Cheryl ஆகியோர் ஹரிக்காக விளையாட்டாக சண்டை போட்டுக்கொண்ட ஒரு விடயம் நடந்தது.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டி பெர்ரியிடம் மகாராணியின் பிளாட்டினம் ஜூபிலியில் கலந்துகொள்ளுமாறு உங்கள் பெயரைக் குறிப்பிட்டு ஹரி கேட்டார் என ஒரு செய்தி உலவுகிறதே என்று கேட்க, உடனே கேட்டி, இளவரசர் ஹரியா, அவர் கவர்ந்திழுக்கும் நபராயிற்றே என கூறியுள்ளார்.
Image: Getty Images
உடனே நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றொரு பாடகியான செரிலிடம், பிளாட்டினம் ஜூபிலி பார்ட்டிக்குப் பின் ஹரியுடன் நீங்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள் என ஒரு செய்தி உலவுகிறதே என்று கூற, உடனே கேட்டி, ஹேய், ஹரி என்னுடைய ஆள், அவரை விட்டுவிடு என விளையாட்டாக செரிலிடம் சண்டை போட்டாராம்.
Image: YOUTUBE
வன்மம் வைத்திருக்கும் மேகன்
இதற்கிடையில், தன்னுடைய திருமண உடை குறித்து கேட்டி பெர்ரி விமர்சித்த ஒரு விடயம் மேகனுக்கு கோபமூட்டியதாக ஒரு தகவல் உள்ளது.
அந்த கோபம் மேகனுக்கு இன்னும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மன்னருடைய முடிசூட்டுவிழாவைத் தொடர்ந்து நடக்க இருக்கும் இசை நிகழ்ச்சிகளில் கேட்டி பாட இருக்கிறார்.
Image: Getty Images
ஆனால், ஹரி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதில்லை. காரணம், மன்னருடைய முடிசூட்டுவிழா நடக்கும் அதே நாளில்தான் ஹரியின் மகன் ஆர்ச்சிக்கும் பிறந்தநாள்.
ஆகவே, ஹரி சீக்கிரமாகவே அமெரிக்கா புறப்பட்டுவிடுவாராம். ஆக, நல்லது, ஹரி அந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததால், கேட்டியை சந்திக்கும் அசௌகரியமான சூழல் தவிர்க்கப்படும் என்கிறார்கள். ஊடகவியலாளர்கள்.
இன்னொரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், கேட்டியின் காதலரான Orlando Bloomம், இளவரசர் ஹரியும் நல்ல நண்பர்கள் என்பதாகும்!