அனைத்திற்கும் இனி ஒரே சார்ஜர் தான்! ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம்
ஐரோப்பா முழுவதும் ஒரே மாதிரியான செல்போன் சார்ஜர்களை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
செல்போன் பயன்பாட்டாளர்கள் ஆப்பிள் மற்றும் ஆண்டிராய்டு ஆகிய செல்போன்களுக்கு என வெவ்வேறு சார்ஜர்களை வாங்க வேண்டிய தேவை உள்ளது.
இதனால் அனைத்து செல்போன்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒரே மாதிரியான சி-டைப் சார்ஜர்களை கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் தனித்தனி சார்ஜர்களை வாங்குவதால் ஏற்படும் பண விரயத்தை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின்படி அனைத்து செல்போன்கள், டேப்லெட்கள் போன்றவற்றில் சி-டைப் சார்ஜர்கள் பயன்படுத்தப்படும் எனவும், இந்த நடைமுறை 2024ஆம் ஆண்டி பிற்பகுதியில் கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்னணு கழிவுகள் இதன்மூலம் குறையும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தினால் ஆப்பிள் நிறுவனம் ஐ-போன்களின் சார்ஜர் மற்றும் connector pin ஆகியவற்றை மாற்றி வடிவமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.