நாடு தழுவிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை: இலங்கையில் ஓரே நாளில் 802 பேர் கைது
புதன்கிழமை இலங்கையில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கிட்டத்தட்ட 802 பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வழங்கிய தகவலின் படி, தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 16 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் வைத்திருந்தது தொடர்பான விசாரணைக்கு கீழ் உள்ள ஒருவரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 794 சோதனைகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கையின் போது பொலிஸாரிடம் சிக்கிய நபர்களிடம் இருந்த பெரும் அளவிலான போதைப்பொருள்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் விவரம்
ஒரு கிலோகிராம் 42 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 464 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 495 கிராம் ஹெரோயின், 01 கிலோகிராம் 58 கிராம் ஐஸ், ஒரு கிலோகிராம் 85 கிராம் மதனமோதகம் மற்றும் 111 கிராம் மாவா போதைப்பொருள், 11 கிராம் 200 மில்லி கிராம் கொக்கெய்ன், 02 கிலோகிராம் 710 கிராம் கஞ்சா, 02 கஞ்சா செடிகள், 395 போதை மாத்திரைகள் என பெருமளவிலான போதைப் பொருட்களை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |