பூமியின் 16% நிலத்தை தன்வசம் வைத்துள்ள பணக்கார குடும்பம்: யார் தெரியுமா?
உலகிலேயே அதிக நிலத்தை வைத்துள்ள குடும்பம் என்ற பெருமையை இங்கிலாந்தின் அரச குடும்பம் பெற்றுள்ளது.
கிராமப்புற விவசாய நிலங்கள், காடுகள், நகர்ப்புறங்களில் நிலம், வீடுகள், ஆடம்பரமான சந்தை வளாகங்கள் மற்றும் கடற்கரைகள் ஆகியவையும் அவர்களுக்குச் சொந்தமானவை.
உலகம் முழுவதும் இவர்களின் நிலங்களையும் சொத்துகளையும் கவனிக்க தனி நிறுவனம் உள்ளது.
பல வணிக வலைத்தளங்களின்படி, இளவரசர் சார்லஸ் உலகம் முழுவதும் 6.6 பில்லியன் ஏக்கர் நிலம் மற்றும் சொத்துகளை வைத்திருக்கிறார்.
இந்த நிலங்கள் கிரேட் பிரிட்டன், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் அமைந்துள்ளன.
உலக செல்வத்தில் 16.6 சதவீதத்தை பிரிட்டிஷ் மன்னர் வைத்துள்ளார். இந்த முழு சொத்தையும், தி கிரவுன் எஸ்டேட் என்ற அமைப்பு நிர்வகிக்கிறது.
பிரிட்டிஷ் அரச குடும்பம் நேரடியாக 2,50,000 ஏக்கர் நிலத்தை நிர்வகிக்கிறது. மீதமுள்ள 1,15,000 ஏக்கர், விவசாயம் மற்றும் காடுகளின் கீழ் உள்ளது.
இதன் மூலம் கிரவுன் எஸ்டேட் பல்வேறு ஷாப்பிங் சென்டர்களை நடத்துகிறது.
அத்துடன் மணல், சரளை, சுண்ணாம்பு, கிரானைட், செங்கல், களிமண், நிலக்கரி ஆகியவற்றையும் விற்பனை செய்கிறது.
மத்திய லண்டனில் உள்ள சொத்துக்கள் உட்பட 18,000 ஹெக்டேர் நிலத்தை உள்ளடக்கிய டச்சி ஆஃப் லான்காஸ்டர் என்ற தனியார் தோட்டத்திலிருந்து வருமானம் வருகிறது. இதன் மதிப்பு 654 மில்லியன் பவுண்டுகள்.
மொத்தத்தில், பிரிட்டிஷ் முடியாட்சியின் உலகளாவிய சொத்துக்கள் $15.6 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |