ஒரே ஒரு பயணச்சீட்டு... ஐரோப்பிய ஆசிய நாடுகளில் பல விமானங்களில் பயணிக்கலாம்: விரிவான விளக்கம்
ஐக்கிய அமீரகத்தில் பணியாற்றுபவர்கள் அல்லது தொழில் புரிபவர்கள் என்றால் இனி உலகின் எந்த நாடுகளுக்கும், ஒரே பயணச் சீட்டில் பயணிக்கும் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளனர்.
எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ்
அதன்படி ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளின் தொழில் நகரங்களையும் சுற்றுலா தலங்களையும் இணைத்து, முதன்மையான விமான சேவைகளில் பயணிப்பதையும் எளிதாக்கியுள்ளனர்.
Credit: Bloomberg
ஐக்கிய அமீரகத்தின் முதன்மை விமான சேவை நிறுவனங்களான எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் ஆகிய இரண்டும் இந்த புதிய திட்டத்திற்காக ஒன்றிணைந்துள்ளதுடன் மற்ற சர்வதேச விமான நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இதனால் துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து பயணிப்பவர்கள் ஒரே ஒரு பயணச்சீட்டை முன்பதிவு செய்வதன் மூலம் பல்வேறு நகரங்களுக்கு சிரமமில்லாமல் விமான சேவைகளை அனுபவிக்க முடியும்.
இது எவ்வாறு நடைமுறை சாத்தியம் என்றால், பிலிப்பைன் விமான சேவை (PAL) நிறுவனத்துடன் எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் ஆகிய இரண்டும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மீண்டும் சோதனை தேவையில்லை
ஐக்கிய அமீரக பயணிகள் பிலிப்பைன்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், PAL உள்ளூர் விமான சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். இது one baggage என்ற திட்டத்தின் கீழ், ஒரே ஒரு பயணச்சீட்டால் சாத்தியப்படுத்தப்படுகிறது.
Credit: swirlster.ndtv
முன்னர், பயணிகள் சர்வதேச விமானத்தை முன்பதிவு செய்ய வேண்டும், பின்னர் உள்ளூர் தேவைகளுக்கு மற்றொரு விமானத்தை முன்பதிவு செய்ய வேண்டும். தற்போது one baggage என்ற திட்டத்தின் கீழ் பயணப் பெட்டிகளையும் மீண்டும் சோதனைக்கு உட்படுத்த தேவையில்லை.
புதிய இந்த திட்டத்தின் கீழ் Air Canada, Qantas, United, Philippine Airlines, Japan Airlines, Gulf Air, Thai Airways, Bangkok Airways, Aegean Airlines உட்பட பல எண்ணிக்கையிலான உள்ளூர் விமான சேவைகளை பயன்படுத்த முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |