டயானாவின் காதலரின் தந்தை மீது பெண்கள் குற்றச்சாட்டு: சர்ச்சையில் பிரித்தானிய பிரதமர்
இளவரசி டயானாவின் காதலரின் தந்தை மீது பெண்கள் குற்றச்சாட்டுகல் முன்வைத்துள்ள விடயத்தில், பிரித்தானிய பிரதமர் கேய்ர் ஸ்டார்மரின் பெயரும் இழுக்கப்பட்டுள்ளது.
டயானாவின் காதலரின் தந்தை மீது குற்றச்சாட்டு
இளவரசி டயானாவின் காதலரான டோடி என்பவரின் தந்தையான முகமது ஃபயத் (Mohamed Fayed), தங்களை சீரழித்ததாகவும், சீரழிக்க முயன்றதாகவும் பல பெண்கள் புகாரளித்து வரும் விடயம் பிரித்தானிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடயம் என்னவென்றால், புகழ்பெற்ற Harrods என்னும் ஆடம்பரப் பொருட்கள் விற்பனையகத்தின் உரிமையாளராக இருந்த ஃபயத், 15 வயது சிறுமி ஒருத்தியை சீரழித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், ஃபயத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டுவரத் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது. அப்போது Crown Prosecution Service என்னும் குற்றவியல் அமைப்பின் இயக்குநராக இருந்தவர், தற்போதைய பிரித்தானிய பிரதமரான கேய்ர் ஸ்டார்மர்.
சர்ச்சையில் பிரித்தானிய பிரதமர்
Crown Prosecution Service அமைப்பின் இயக்குநராக இருந்த ஸ்டார்மர், ஃபயத்தை சட்டத்தின் பிடியில் சிக்கவைக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்கள்.
கன்சர்வேட்டிவ் கட்சி அமைச்சரான Matt Vickers கூறும்போது, ஸ்டார்மர் Crown Prosecution Service அமைப்பின் இயக்குநராக இருந்தபோது, மற்றவர்கள் செய்த நல்ல விடயங்களுக்கெல்லாம் தான் நல்ல பெயரை வாங்கிக்கொண்டார்.
ஆனால், அவரது கண்காணிப்பின் கீழ் ஏதாவது தவறு நடந்துவிட்டால் மட்டும், அதற்கு வேறு யாரோ பொறுப்பு என்பதுபோல நடந்துகொள்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், ஸ்டார்மர் அந்த வழக்கைக் கையாளவில்லை, அது அவரது மேஜைக்கு வரவில்லை என்று கூறி, பிரதமர் அலுவலகம் அந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |