ஆண்டர்சன் பேட்டிங் செய்ய வந்தவுடன் கோலி, சிராஜிடம் என்ன சொல்லியிருக்கார் பாருங்க... வெளியான வீடியோ
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, கோஹ்லி மற்றும் சிராஜ் பேசிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில், இரு அணி வீரர்களும் தங்கள் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்த, இறுதியில் இந்திய அணி 151 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Siraj and Kohli ? pic.twitter.com/BmRUcw95aV
— Simran (@CowCorner9) August 20, 2021
இந்நிலையில், ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, கடைசி விக்கெட் ஆன ஆண்டர்சன் களத்தில் விளையாட வந்த போது, கோஹ்லி அப்போது பந்து வீசிய சிராஜிடம் பந்தை பவுன்சராக அவரது ஹெல்மேட்டிற்கு வீசு, அப்போது அவர் பேட்டை மேலே தூக்கி தடுத்து ஆட முயற்சி செய்வார் விக்கெட் விழும் என்று கூறுகிறார்.
அப்போது சிராஜ் தலை தானே என்று அவரது தலையை அடித்து காட்டுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இருப்பினும் மொகமது சிராஜ் தன்னுடைய சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஆண்டர்சனை போல்டாக்கி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.