2025ம் ஆண்டில் டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள்: முதலிடத்தில் இந்திய வீரர்?
2025ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியல் இந்திய வீரர் முகமது சிராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதல்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்னும் மீதம் உள்ளது.
இந்த போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வெறும் 58 ஓட்டங்கள் மட்டுமே தேவையாக உள்ளது.
முகமது சிராஜ் அசத்தல்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதல் போட்டியில் 7 விக்கெட்டும், 2 வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதன் மூலம் இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முகமது சிராஜ் முதலிடத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக ஜிம்பாப்வே வீரர் முசரபானி 36 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.
இவர்களை தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோமல் வாரிகன் ஆகியோர் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |