ஆண்டர்சனை போல்டாக்கி... ஸ்டெம்ப்பை பிடுங்கி கொண்டாடிய சிராஜ்: வெளியான வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி விக்கெட்டை எடுத்த பின்பு ஸ்டம்பை பிடுங்கிக் கொண்டு ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 12-ஆம் திகது துவங்கியது.
இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
அதன் பின் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட்டின்(180) அபார ஆட்டத்தால் 391 ஓட்டங்கள் எடுக்க, அதன் பின் ஆடிய இந்திய அணிக்கு கடைசி கட்டத்தில் பும்ரா-ஷமி ஜோடி சிறந்த பார்ட்னர்ஷிப்பை கொடுத்ததால், 8 விக்கெட் இழப்பிற்கு 298 ஓட்டங்கள் எடுத்த போது, ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
We Are Literally Running Out Of Words,This Guy Is The Most Improved Bowler In Recent Times.
— Sardar Chandan Singh (@ChandanTRS) August 17, 2021
4 Wickets in First Innings And 4 Wickets in Second Innings.
Total 8 Wickets In This Match Miyan Magic At Lords Test✌️
Take A Bow For Hyderabadi Guy #Siraj ?#TeamIndia @KTRTRS @JAGANTRS pic.twitter.com/cja3m9xGUv
இதனால் 271 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 120 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆகி, 151 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில், இந்தியா ஒரு வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொகமது சிராஜ், இங்கிலாந்து அணியின் கடைசி விக்கெட்டான ஜேம்ஸ் ஆண்டர்சனை தன்னுடைய துல்லியமான பந்து வீச்சின் மூலம் போல்டாக்கினார்.
அதன் பின் உடனடியாக முதல் ஆளாக ஓடி வந்து ஸ்டெம்பை பிடுங்கி வெற்றியை ஆக்ரோஷமாக கொண்டாடினார். இதன் வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.