இந்தியா வரலாறு காணாத வெற்றி! தெறிக்கவிட்ட சிராஜ்..6 ரன்னில் த்ரில் வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
கடைசி டெஸ்ட்
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இந்தியா 224 ஓட்டங்களும், இங்கிலாந்து 247 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 396 ஓட்டங்கள் குவித்தது.
இதன்மூலம் 374 ஓட்டங்கள் இலக்காகி நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 339 ஓட்டங்கள் எடுத்தது. மழையால் முன்கூட்டியே ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
சிராஜின் புயல்வேக தாக்குதல்
இந்த நிலையில் இங்கிலாந்து கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியது. சிராஜ் புயல்வேகத்தில் இங்கிலாந்தை தாக்க விக்கெட்டுகள் சரிந்தன.
ஜேமி ஸ்மித் 2 ஓட்டங்களில் வெளியேற, ஓவர்டன் 9 ஓட்டங்களில் lbw ஆகி வெளியேறினார். அடுத்து பிரசித் பந்துவீச்சில் ஜோஷ் டங் போல்டாக பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இறுதியாக சிராஜ் ஓவரில் கடைசி விக்கெட்டாக அட்கின்சன் (17) கிளீன் போல்டு ஆக, இந்திய அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
வரலாற்று வெற்றி
இது இந்தியாவின் வரலாற்று வெற்றியாகும். இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றதால் தொடர் சமனில் முடிந்தது.
இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா இல்லாமலேயே, சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |