பரிசாக கிடைத்த 4 லட்சம் ரூபாயை அப்படியே இலங்கை ஊழியர்களுக்கு கொடுத்த சிராஜ்! குவியும் பாராட்டு
ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற சிராஜ், அதன் மூலம் கிடைத்த 4.15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கினார்.
இந்திய அணி சாம்பியன்
16வது ஆசியக்கோப்பையின் இறுதிப்போட்டி கொழும்பில் நடந்தது. இதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
பந்துவீச்சில் மிரட்டிய முகமது சிராஜ் 21 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதிலும் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், குறைந்த பந்துகளில் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றிய சமிந்தா வாஸ் சாதனையை சமன் செய்தார்.
AP Image
ஆட்டநாயகன் சிராஜ்
மேலும் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் அவருக்கு பரிசாக 5,000 டொலர்கள் (4.15 லட்சம்) கிடைத்தது.
ஆனால், தனக்கு கிடைத்த பரிசுப் பணத்தை மைதான ஊழியர்களுக்கு வழங்குவதாக சிராஜ் அறிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பு அனைவரையும் வியக்க வைத்தது. சிராஜின் செயலை கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |