வில்லியம்சன் உங்களை அவுட்டாக்க நான் வச்சிருக்கும் திட்டம் இது தான்! வெளிப்படையாக கூறிய இந்திய பந்து வீச்சாளர்
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், நியூசிலாந்து வீரரான வில்லியம்சனை எப்படி அவுட்டாக்குவேன் என்பது குறித்த ரகசியத்தை கூறியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டி வரும் ஜுன் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இந்த டெஸ்ட் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரம், சிறந்த பேட்ஸ்மேனான வில்லியம்சனை அவுட்டாக்க தான் வைத்திருக்கும் திட்டம் குறித்து கூறியுள்ளார்.
அதில், வில்லியம்சன் மிகச்சிறந்த வீரர், அவரை அவுட் ஆக்குவது எளிதல்ல. அவரை வீழ்த்த என்னிடம் திட்டம் உள்ளது. சோர்வடையாமல் குறிப்பிட்ட ஒரு இடத்தில் தொடர்ச்சியாக பந்துவீச முயற்சிப்பேன்.
அவரை ரன் எடுக்க விடாமல் நெருக்கடியை உண்டாக்குவேன். இது அவரை அடித்து ஆடத் தூண்டும். அப்போது அவர் ஆட்டமிழக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.