ஆண்டர்சன் மீதிருந்த கோபத்தை பேர்ஸ்டோவிடம் காட்டிய இந்திய இளம் வீரர்! மைதானத்தில் நடந்த தரமான சம்பவத்தின் வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில், இந்திய அணியின் இளம் வீரர் சிராஜ் ஆக்ரோஷமாக பதிலடி கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி, டிரண்ட் பிரிட்ஜில் கடந்த 4-ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 278 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, இதைத் தொடர்ந்து 95 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸி ஜோ ரூட்டின் அபார சதத்தால் 303 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் 208 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி ஆடி வரும் இந்திய அணி சற்று முன் வரை ஐந்தாம் நாளான இன்று ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
SMASHED STRAIGHT TO THE MAN! ?
— Sony Sports (@SonySportsIndia) August 7, 2021
Siraj sends-off Bairstow ?
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! ?#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #MohammedSiraj pic.twitter.com/AexNyvMEej
இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு வருவதால், இது இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில், இப்போட்டியில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் இங்கிலாந்து வீரரான ஜானி பேர்ஸ்டோவை இரண்டாவது இன்னிங்சில் ஆட்டம் இழக்க வைத்த போது சற்று ஆக்ரோஷமாக அந்த விக்கெட்டை கொண்டாடினார்.
ஏனெனில் ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்த சிராஜை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் சீண்டியது மட்டுமின்றி அவர் மீது உரசியும் சென்றார்.
இதனால் இரண்டாவது இன்னிங்சில் தனது கோபத்தை பந்து வீச்சில் வெளிப்படுத்திய சிராஜ் இங்கிலாந்து வீரர்களுக்கு எதிராக பவுன்சர்கள் மூலம் மிரட்டி வந்தார். அப்படி தான் பேர்ஸ்டோவை ஷார்ட் பால் மூலம் சிராஜ் வீழ்த்தினார்.
அப்போது அவர், அந்த மகிழ்ச்சியில் பேர்ஸ்டோவை நோக்கி வாயில் விரல் வைத்து விக்கெட்டை கொண்டாடி அவரை வழியனுப்பினார். அப்போது தன்னுடைய ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தினார்.
இது ஆண்டர்சன் அவரை சீண்டியதன் காரணமாகவே, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிராஜ் இப்படி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.