‘உதடுகள் மீது விரலை’ வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவது ஏன்? உண்மையை உடைத்த சிராஜ்
இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ், விக்கெட்டு எடுத்த பிறகு ‘Keep quiet’ என உதடுகள் மீது விரலை வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்கான பின்னணி காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் சிராஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
சிராஜ் விக்கெட்டுகளை சாய்க்கும் போது உதடுகள் மீது விரலை வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.
அப்படி கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்கான காரணத்தை சிராஜ் செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த கொண்டாட்ட பாணி என்னை வெறுப்பவர்களுக்கும் விமர்சகர்களுக்குமானது.
இதை என்னால் செய்ய முடியாது என அவர்கள் என்னைப் பற்றி நிறைய குறை கூறுவார்கள்.
எனவே எனது பந்து வீச்சால் அவர்களுக்கு பதிலளிப்பதாக நான் கருதினேன் என சிராஜ் தெரிவித்துள்ளார்.