பும்ரா இல்லாதபோது சிறப்பாக பந்துவீசுவது எப்படி? ரகசியம் உடைத்த சிராஜ்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தனது பந்துவீச்சு, பும்ரா இல்லாத போட்டிகளில் எப்படி சிறப்பாக உள்ளது என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
முகமது சிராஜ்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சிராஜ் (Mohammed Siraj) அபாரமாக பந்துவீசி 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குறிப்பாக, லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.
இதன்மூலம் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) இல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறுவது கடினம் என்ற கூற்றை சிராஜ் மீண்டும் உடைத்தார்.
ஏனெனில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா இல்லாத இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் சிராஜ்தான்.
அனைத்தையும் முயற்சித்தேன்
இந்திலையில் பும்ரா இல்லாத போட்டியில் சிறப்பாக பந்துவீசுவது எப்படி என்ற கேள்விக்கு சிராஜ் பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "ஜஸ்ஸி பாய் (பும்ரா) முதுகு காயம் காரணமாக அணியில் இல்லாததாலும், அவரது பணிச்சுமை நிர்வகிக்கப்பட்டதாலும், பந்துவீச்சு பிரிவில் நேர்மறையை நிலைநிறுத்த என்னால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தேன்.
எனது அணி வீரர்கள், ஆகாஷ் தீப் மற்றும் அனைவரிடமும் நான் பேசும் போதெல்லாம், நம்மால் அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையைப் பரப்ப முயற்சித்தேன்.
நாம் ஏற்கனவே செய்ததை மீண்டும் செய்ய முடியும் என நம்பினேன். எனது தோள்மேல் பொறுப்பு ஏறும்போதும், நீங்கள் அதனை ஒரு சாதாரண தொடராகப் பார்க்கும்போதும், எனது செயல்திறன் என்பது எப்போதும் வளர்ந்துகொண்டே இருக்கும்.
அந்த பொறுப்பு எனக்கு வித்தியாசமான மகிழ்ச்சியைத் தருகிறது மற்றும் எனது நம்பிக்கையை அதிகரிக்கிறது. மக்கள் என்னைப் பற்றி பேசியதையெல்லாம் எட்ஜ்பாஸ்டனில் உங்களிடம் கூறினேன்.
மேலும் அந்த பேச்சுக்களை எல்லாம் நிறுத்த வேண்டிய நேரமாகவும் கருதினேன்.
பொதுவாக நான் என்ன செய்கிறேன் என்பதை நான் நன்கு அறிந்திருக்கிறேன். மேலும் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனிப்பதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு எனது போராட்டம் தெரியாது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |