சிக்ஸர்களை பறக்கவிட்ட சிராஜ்: பயிற்சி டெஸ்டில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி
இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பயிற்சி டெஸ்ட்
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் லெவன் அணிகளுக்கு இடையிலான பயிற்சி டெஸ்ட் கொழும்பில் நடந்தது.
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 363 ஓட்டங்களும், இந்தியா அணி 357 ஓட்டங்களும் குவித்தன. இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 200 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
பின்னர் ஆடிய இந்திய அணி ஜெய்ஸ்வால் 61 ஓட்டங்களும், கில் 44 ஓட்டங்களும் எடுத்தனர்.
மொஹம்மது சிராஜ் (Mohammed Siraj) சிக்ஸர்களை பறக்கவிட்டு 15 பந்துகளில் 32 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 1 பவுண்டரி) விளாச, இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |