சுவிஸில் ஒரே நாளில் அடக்கம் செய்யப்பட்ட சகோதரர்கள் இருவர்
சுவிட்சர்லாந்தில் சடலமாக மீட்கப்பட்ட சகோதரர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் நல்லடக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் சொந்த சகோதரரை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தில் தற்போது அரசு சட்டத்தரணிகள் அலுவலகம் விசாரணை முன்னெடுத்து வருகிறது.
அவர்கள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் 26 வயதான சகோதரி தமது 25 வயது சகோதரரை கத்தியால் கொடூரமாக தாக்கி, அவரது மரணத்திற்கு காரணமாகியுள்ளார். தொடர்ந்து அவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
இருவரது சடலங்களையும் பெற்றோரை முதன் முதலாக பார்த்து உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். செப்டம்பர் 14ம் திகதி நடந்த இச்சம்பவத்தில், அதே நாளில் இருவரை நல்லடக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இறந்த இருவரின் நண்பர்களும் உறவினர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதில், உண்மையில் அரக்கர்கள் இருக்கிறார்கள் அப்படியே பேய்களும். அவர்கள் நம்மில் வாழ்கிறார்கள், சில நேரங்களில் வெற்றி பெறுகிறார்கள் என ஸ்டீவன் கிங்கின் நாவலில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் உளவியல் பாதிப்புக்கு இலக்கானவர் என்று அவரது நண்பர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.