அக்கா நான் சாகப்போகிறேன்... அழகே உருவான இளம்பெண்ணின் கடைசி வார்த்தைகள்: கனடாவில் ஒரு துயர சம்பவம்
தன் தங்கையின் கடைசி வார்த்தைகளை அந்த கனேடிய பெண்ணால் கடைசி வரை மறக்கமுடியாது என்றே கூறவேண்டும்...
அக்கா, நான் சாகப்போகிறேன், பரவாயில்லை, நீங்கள் எப்படியாவது இங்கிருந்து ஓடிவிடுங்கள்... இதுதான் Della Duquetteஇன் தங்கை Charlene Graham (34)இன் கடைசி வார்த்தைகள்!
Charleneம் Delane Graham (34)ம் நீண்ட நாள் காதலர்கள். திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகி இரண்டு குழந்தைகளும் பிறந்த பிறகும், இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் தொடர்ந்துள்ளன.
சமீபத்தில் ஒருநாள், தன் அக்காவான Dellaவிடம், நான் என்றாவது தொலைபேசியில் நீங்கள் அழைக்கும்போது பதிலளிக்கவில்லை என்றால் உடனே என்னைத் தேடி வாருங்கள், ஏனென்றால் Delaneஆல் எனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டிருக்கும் என்பது உறுதி என்று கூறியிருக்கிறார் Charlene.
இந்நிலையில், ஒரு மாதம் முன்பு கணவனை விட்டுப் பிரிந்து தன் வீட்டுக்கு வந்த Charlene, வேறொருவரைக் காதலிக்கத் துவங்கியிருக்கிறார்.
புதிதாக பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிக்கு சேர்ந்த நிலையில் ஒருநாள் அவர் தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்காமல் இருக்கவே, பதறிய அவரது குடும்பம் பொலிசாருக்கு தகவலளித்துள்ளது. பொலிசார் வரும் வரை பொறுக்க இயலாத Della, தங்கையைத் தேடி ஓடியிருக்கிறார்.
அங்கே தங்கையை அவரது கணவன் தாக்குவதைக் கண்ட Della, தங்கை கணவனை பிடித்து தரையில் தள்ளி கட்டுப்படுத்த முயன்றிருக்கிறார். அப்போதுதான் அவர் கையில் கத்தி ஒன்று இருப்பதையும், அவர் ஏற்கனவே Charleneஐக் கத்தியால் பல முறை குத்தியிருப்பதையும் கவனித்திருக்கிறார் Della.
அதே கத்தியால் Dellaவின் கையில் Delane கீற, அவரது பிடி நழுவியிருக்கிறது. உடனே, தான் தங்கியிருந்த கேம்பருக்குள் சென்ற Delane, ஒரு துப்பாக்கியை எடுத்துவந்து Dellaவின் கண் முன்னாலேயே அவரது தங்கையை சுட்டிருக்கிறார். பிறகு துப்பாக்கியால் Dellaவைக் குறிவைக்க, அப்போதுதான், அக்கா, ஓடிவிடு என்று கூறியிருக்கிறார் Charlene.
பிறகு தனது கேம்பருக்குள் சென்ற Delane, தன்னைத்தான் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தான் உதவி கோரி கூக்குரல் எழுப்பியும் அருகிலிருந்த யாரும் உதவிக்கு வரவில்லை என்கிறார் Della.
வாழ்க்கையில் இத்தனை ஆண்டுகளாக பிரச்சினை அனுபவித்தும், அது குறித்து குடும்பத்தாரிடமோ, பொலிசாரிடமோ, அல்லது சமூக ஆர்வலர்களிடமோ கூறி Charlene உதவி பெற்றிருந்திருக்கலாம். ஆனால், அவர் யாரிடமும் உதவி கோரவில்லை என்கிறார் அவரது மற்றொரு சகோதரியான Roxanne!