சகோதரி பிரபல டென்னிஸ் நட்சத்திரம்: பல நுறு கோடி சொத்து மதிப்புடன் இன்னொரு மிர்சா
பிரபல டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் சகோதரி ஆனம் மிர்சா ஊடகவியலாளராக வாழ்க்கையை தொடங்கி, தற்போது பெயர் குறிப்பிடும் தொழிலதிபராக வலம் வருகிறார்.
சாதித்த மிர்சா
சானியா மிர்சா தனது விளையாட்டுத் திறமையால் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து பிரபலமடைய, அவரது சகோதரி ஆனம் மிர்சா இன்னொரு பாதையை தெரிவு செய்து, தொழிலதிபராக சாதித்துள்ளார்.
ஊடகவியலில் பட்டம் பெற்ற ஆனம் மிர்சா, குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களில் ஊடகவியலாளராக பணியாற்றியுள்ளார். இருப்பினும் தொழில்துறை மீதான அவரது ஈர்ப்பு 2013ல் நிறைவேறியது.
Ink to Change என்ற பெயரில் வளரும் ஊடகவியலாளர்களுக்கு என ஒரு இணைய பக்கத்தை உருவாக்கினார் ஆனம் மிர்சா. இதன் அடுத்த கட்டமாக 2014ல் The Label Bazaar என்ற பெயரில் ஆயத்த ஆடைகள் நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார்.
அத்துடன், 2022ல் ரம்ஜான் பண்டிகை காலத்தை முன்னிட்டு Daawat-e-Ramzan என்ற பெயரில் இந்தியாவின் மிகப்பெரிய சந்தை ஒன்றை துவங்கினார். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் வேளையில் இவரது சந்தைக்கு சராசரியாக 150,000 மக்கள் வந்து செல்வதாக கூறப்படுகிறது.
சந்தை மதிப்பு பல கோடிகள்
2023ல் Dua India என்ற பெயரில் இன்னொரு ஆயத்த ஆடை பிராண்டை துவங்கினார். 2016ல் அக்பர் ரஷீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ஆனம் மிர்சா, கருத்துவேறுபாடு காரணமாக 2018ல் இந்த தம்பதி விவாகரத்து பெற்றது.
அதன் பின்னர் 2019ல் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மற்றும் அரசியல்வாதியான முகமது அசாருதீன் என்பவரின் மகனான முகமது அசாதுதீன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
தனது சகோதரி சானியா மிர்சா போன்று விளையாட்டில் கவனம் செலுத்தாத ஆனம் மிர்சா தொழில்துறையில் சாதித்துள்ளார். இவரது நிறுவனங்களில் சந்தை மதிப்பு பல கோடிகள் என்றே கூறப்படுகிறது.
ஆனம் மிர்சாவின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ 331 கோடி என்றே வெளியான தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |