ஜெம் வீரமணி வழக்கு - பொதுமக்கள் தகவல் அளிக்க காவல்துறை வேண்டுகோள்
sit announce number for public complaint about gem veeramani: ஜெம் வீரமணி விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க காவல்துறை மொபைல் எண்ணை அறிவித்துள்ளது.
ஜெம் வீரமணி வழக்கு
பிரபல கிரானைட் தொழில் அதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான 84 வயதான வீரமணி, சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த குற்ற சம்பவத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் மற்றும் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் குற்றவாளிகளை காப்பாற்ற பல கோடி பணம் கைமாறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு குறித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் பி.சி.தேன்மொழி ஐபிஎஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று ஜெம் வீரமணியால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் தாயார் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஆஜராகி அளித்த புகாரின் அடிப்படையில், ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகார் அளிக்க மொபைல் எண்
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் வழக்குடன் தொடர்புடைய தகவல்கள், உண்மைகள், ஆவணங்கள் அல்லது பிற முக்கிய விவரங்கள் தெரிந்திருந்தால் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் தெரிவிக்கலாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
93453 19676 என்ற எண்ணில் நேரடியாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல்களை தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.