ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் மரணம்! கண்ணீரில் ஆழ்த்திய சோக சம்பவம்
தமிழக மாவட்டம் சிவகங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குளத்திற்கு சென்ற சிறார்கள்
சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி கிராமத்துச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது 10 வயது மகள் யாழினி. இவரது சகோதரர் லட்சுமணனின் மகன்கள் மகேந்திரன் (7) மற்றும் சுந்தர் (5) மற்றும் யாழினி ஆகிய மூவரும் குளத்தில் விளையாட சென்றுள்ளனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக மூவரும் குளத்தில் மூழ்கினர். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மூன்று பிள்ளைகளும் உயிரிழந்தனர்.

பொலிஸார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் பிள்ளைகளின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        