நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்ய உத்தரவு

Sivaji Ganesan Chennai
By Sivaraj Mar 03, 2025 09:26 AM GMT
Report

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடனை திருப்பி தராததால் வழக்கு

ஈஷன் புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களாக நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி உள்ளனர்.

இந்த நிறுவனத்தின் சார்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரிக்க தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் கடன் பெற அணுகியுள்ளனர்.

அந்நிறுவனம் 3,74,75,000 ரூபாய் கடன்தொகையை ஆண்டுக்கு 30 சதவீதம் வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கியிருக்கிறது.

ஆனால், நிபந்தனையின்படி ஈஷன் புரொடக்ஷ்ன்ஸ் கடனை திருப்பி தராததால் வழக்கு தொடரப்பட்டது. 

Shivaji Ganesan house confiscation court order

அதன்படி, கடன்தொகையை வட்டியுடன் சேர்த்து 9,02,40,000 ரூபாயை வசூலிக்க ஏதுவாக, 'ஜகஜால கில்லாடி' படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குநரிடம் ஒப்படைக்கும்படி, கடந்த 2024ஆம் ஆண்டு மே 4ஆம் திகதி நீதிபதி உத்தரவிட்டார். 

படம் முழுமையடையவில்லை

அந்த உத்தரவில், படத்தின் உரிமைகளைப் பெற்று அவற்றை விற்று கடன்தொகையை ஈடுசெய்யவும், மீதத்தொகையை ஈஷன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், படம் முழுமையடையவில்லை எனக்கூறி பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் (ஜப்தி) செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. 

ரூ.23 லட்சம் சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி

ரூ.23 லட்சம் சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி

மேலும் அந்த மனுவில், தற்போது வரை கடன்தொகையை வட்டியுடன் சேர்த்து 9,39,05,543 ரூபாயை வசூலிக்க வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதுவரை பதில் மனுதாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறி, நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இந்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட சார் பதிவாளருக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை மறுநாளுக்கு தள்ளி வைத்தார்.     

Shivaji Ganesan house confiscation court order

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US