கேப்டன் விஜயகாந்த் குடும்பத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் ஆறுதல்
கேப்டன் விஜயாகாந்த் மறைவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
விஜயாகாந்திற்கு அஞ்சலி
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு பிரபலங்களும், மக்களும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
மேலும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத பல திரைப் பிரபலங்கள் அவரது நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயாகாந்தின் இல்லத்திற்கு சென்று அங்குள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், நேற்று நடிகர் சூர்யா, நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்று அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |