உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷூக்கு பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷை சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பரிசளித்த சிவகார்த்திகேயன்
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் லிரெனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இவர், தனது 18 வயதிலே உலகின் 18-வது சாம்பியனாக சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து குகேஷூக்கு பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர், ஆந்திர முதலமைச்சர, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், சென்னை திரும்பிய குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது, அவருக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை குகேஷுக்கு பரிசாக சிவகார்த்திகேயன் வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |