நான் அந்த மாதிரி ஆள் இல்லை.., தனுஷை மறைமுகமாக தாக்கிப்பேசிய சிவகார்த்திகேயன்?
நடிகர் தனுஷை சிவகார்த்திகேயன் தாக்கிப்பேசியதாகப் பெரும் சர்ச்சை ஒன்று சமூக வலைத்தளப் பக்கங்களில் கிளம்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது வெள்ளித்திரையில் டாப் நடிகராகப் புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
தனுஷ் நடித்த 3 படத்தில் சிறிய வேடத்தில் தொடங்கிய இவரது திரைப்பயணம் இன்றும் உயர்ந்த ஹீரோ என்ற அந்தஸ்தில் வந்து நிற்கிறது.
அந்தவகையில், தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நெருக்கமான நட்பு இருந்து வந்தது அனைவருக்கும் தெரியும்.
நடிகர் தனுஷ் சிவகார்த்திகேயனை தனது தம்பி என்றும், பின்னாளில் அவர் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்து நிற்பார் என்றும் பல மேடைகளில் அவர் பேசியுள்ளார்.
இப்படி நெருங்கிய நட்பு இருந்த தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே சில ஆண்டுகளாக அந்த நெருக்கம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
அந்தவகையில், வினோத் ராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன் தயாரிப்பில் சூரி "கொட்டுக்காளி" படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், "நான்தான் அவர்களைக் கண்டுபிடித்து சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினேன், நான் தான் அவர்களை முன்னேற்றினேன் என்றெல்லாம் நான் ஒருபோதும் யாரையும் நான் சொல்லமாட்டேன்.
அப்படியே என்னைச் சொல்லிச் சொல்லிப் பழக்கிவிட்டார்கள். என்னுடைய நபரை அறிமுகம் செய்து வைப்பதைப் போலத்தான் செய்கிறேன். நடிகராக இந்த இடத்தில் இருந்து அதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
Aaha 👀
— Siddarth Srinivas (@sidhuwrites) August 13, 2024
pic.twitter.com/rscC0rsCic
இது வெற்றியடைந்தால் இவ்வாறு செய்வது தொடரும்" என்று கூறினார்.
சிவகார்த்திகேயன் மேடையில் தனுஷைத் தான் தாக்கிப் பேசியுள்ளார் என்று சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ரசிகர்கள் இடையே சமூகவலைத்தகங்களில் மோதல் வெடித்துள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு எதிராகத் தனுஷ் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் குறித்துப் தனுஷ் பேசியுள்ள பழைய வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
Difference between this echa & my @dhanushkraja 🥺❤#Sivakarthikeyan #Dhanush @Dhanush_Trends https://t.co/6inHaCmqZX pic.twitter.com/qkZlBS1zNF
— Koushick (@koushik_4_u) August 13, 2024
See this raa mada koo🔥pic.twitter.com/EpVSarC2V4
— Koushick (@koushik_4_u) August 13, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |