''பேசுறவங்க பேச தான் செய்வார்கள்.., இதை எல்லாம் சந்தித்து தான் ஆக வேண்டும்.., விமர்சனங்களுக்கு சிவகார்த்திகேயன் பதில்
சிவகார்த்திகேயனின் அயலான் பட புரமோஷனில் இருக்கும் சிவா இது குறித்து பேசி இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு அண்மையில் பேசி இருக்கிறார்.
இமான்- சிவகார்த்திகேயன் விடயம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் குறித்து டி.இமான் பேட்டி ஒன்றில், சிவா தனக்கு துரோகம் செய்து விட்டதாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன், இமான் மனைவியை விரும்பியதாகவும், தம்பி போல பாவித்த சிவாவே இப்படி நடந்து கொண்டதின் காரணமாகத்தான் அவர் அப்படி பேசினார் என்றும் திரை விமர்சகர்கள் கூறினார்கள்.
இமான் குறித்த விமர்சனத்துடன், நெடுநாளாகவே சிவகார்த்திகேயன் சீக்கிரமாக பெரிய இடத்தை பிடித்து விட்டார் என்று விமர்சனமும் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவரது நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் அயலான் புரமோஷனில் இருக்கும் சிவா இது குறித்து பேசி இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு அண்மையில் பேசி இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் கூறுகையில்...
''இந்த உலகத்தில் எல்லோருக்கும் எல்லாமே தெரிவதோ, புரிவதோ இல்லை அல்லவா? அவர்கள் அவர்களுடைய மனநிலையில் இருந்து பேச தான் செய்வார்கள்.
அதனை நாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், எல்லோருமே அந்த மாதிரியான ஒரு பக்கத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களும் எங்கேயோ தனக்கும் ஒரு மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும் என்ற ஆசைப்படுகிறார்கள். அதை வெளிப்படுத்த தெரியாமல் வெளியாகும் வார்த்தைகள் தான் அவை.
இங்கு வலிகள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. இந்த மாதிரியான வலிகள் இல்லாமல் வெற்றியே இல்லை. சினிமா என்பது எப்போதுமே மிகவும் ஒரு கஷ்டமான இடம் தான். இது மற்றவர்களின் கருத்தின் அடிப்படையில் இருக்கும் ஒரு தொழில் ஒருவருக்கு நாம் செய்வது பிடிக்கும், இன்னொருவருக்கு நாம் செய்வது பிடிக்காது.
இதை எல்லாம் நாம் சந்தித்து தான் ஆக வேண்டும், வேறு வழியே கிடையாது. சிலர் நம்மை ஈசியாக வந்து விட்டீர்கள் என்று சொல்வார்கள், சிலர் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறாயே சூப்பர் என்று பாராட்டுவார்கள். இது இரண்டையுமே நாம் மனதில் எடுத்துக் கொள்ளக்கூடாது. நாம் நம்முடைய வேலையை மட்டும் பார்த்து சென்று கொண்டே இருக்க வேண்டும்'' என்று பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |