முதல் படத்தில் வெறும் ரூ.10,000 சம்பளம்.., நடிகர் சிவகார்த்திகேயனின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு?
நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்துமதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன்
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமான சிவாகார்த்திகேயன், சின்ன திரையிலேயே பல அவதாரங்களை எடுத்தார்.
அங்கிருந்து சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் அடுத்தடுத்து அசுரத்தனமாக வளர்ந்து நிற்கிறார்.
காமெடியனாகவும் செகண்ட் ஹீரோவாகவும் நடித்து வந்த சிவகார்த்திகேயன், இப்போது டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.
சிவாவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சர்வ சாதாரணமாக 100 கோடி ரூபாய் வசூல் செய்கின்றன.
தற்போது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் அமரன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர், நேற்று மாலை வெளியானது.
இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்புக்குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
2012-ம் ஆண்டு மெரினா படத்திற்கு வெறும் ரூ.10,000 மட்டுமே சம்பளம் வங்கிய சிவகார்த்திகேயன் தற்போது ஒரு படத்திற்கு 35 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் சொல்லப்படுகிறது.
இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.50 - 60 கோடி சம்பாதிக்கும் சிவகார்த்திகேயன், விளம்பரங்கள், நிகழ்ச்சிகள் மூலமும் கோடிகளை குவித்து வருகிறாராம்.
சென்னை வளசரவாக்கத்தில் சொந்த வீட்டில் வசித்து வரும் சிவகார்த்திகேயன், ஈசிஆர் சாலையில் பல கோடிகள் மதிப்பில் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றை வாங்கிப் போட்டுள்ளாராம்.
அதேபோல் தனது சொந்த ஊரான திருவீழிமிழலையிலும் பிரம்மாண்டமாக வீடு கட்டியுள்ளார்.
மேலும் ஆடி, BMW, மினி கூப்பர் போன்ற சொகுசு கார்களும் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமாக உள்ளன. சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு மொத்தம் ரூ.150 கோடி என சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |