என் அப்பா உயிர் அதுல போச்சு... என்னை கைவிட்டுட்டாங்க: கண்கலங்கிய சிவகார்த்திகேயன்
நம்புனவங்க என்னை கைவிட்டுட்டாங்க என்று நடிகர் சிவகார்த்திகேயன் கண்கலங்கி பேசியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும், பாடகராகவும், மிமிக்ரி கலைஞராக பல துறைகளில் பணியாற்றி வருகிறார்.
ஆரம்பத்தில் ஒரு சேனலில் மிமிக்ரி கலைஞராக நுழைந்த சிவகார்த்திகேயனுக்கு, ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
தொகுப்பாளரான சிவகார்த்திகேயனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக அது இது எது நிகழ்ச்சிதான் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்களை உருவாக்கி தந்தது.
இதனையடுத்து, விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்த சிவகார்த்திகேயன், தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதன் பிறகு, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகராக மாறினார்.
மனம் திறந்து பேசிய சிவகார்த்திகேயன்
இந்நிலையில், மாவீரன் பட நிகழ்ச்சி மேடையில் சிவகார்த்திகேயன் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
நான் முதன் முதலாக ‘மெரினா’ படத்தில் நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழா மெரினாவில் நடந்தது. அப்போது அந்த விழாவிற்கு வெறும் 50 பேர் தான் வந்தாங்க. ஆனா.. இப்போ ‘மாவீரன்’ படத்தின் விழாவிற்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் வந்ததைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
இயக்குனர் அஸ்வின் மண்டேலா படத்தைப் பார்த்த எனக்கு இவருடன் பணியாற்ற வேண்டும் என்று தோன்றியது. அஸ்வின் எப்போதுமே கோபம் பட மாட்டார். ரொம்ப அமைதியானவர். நான் இவரிடம் படம் பண்ணலாம் என்று சொல்லும்போது, இந்த மாவீரன் படத்தின் ஐடியாவை என்னிடம் கூறினார்.
நான் சில தயாரிப்பாளர்களை ரொம்ப நம்பினேன். ஆனால், என்னை கைவிட்டுவிட்டார்கள். ஆனால், நான் யாரையும் கைவிடவில்லை. நம்பிக்கையையும் விடவில்லை. ரசிகர்களும், மக்களும் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். மிஷ்கின் சார் பெரிய அறிவாளி. ஆனால், அவர் படப்பிடிப்பில் எதையும் காட்டவில்லை. அலடிக்கவும் இல்லை.
இப்படத்தின் டைட்டில் ‘மாவீரன்’. இந்த பெயர் ஒரு பவர்புல். என் வாழ்க்கையில், என் அப்பா தான் மாவீரன். அவர் செய்யும் வேலையை ரொம்ப சந்தோஷமாக உண்மையாக செய்தார்.
எப்போதுமே அவரை காவல்துறை உடையில் பார்ப்பேன். அவர் சுமார் 2500 கைதிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். என் அப்பா அந்த துறைக்கு எவ்வளவு உண்மையாக இருந்திருந்தால் அவர் அமரும் நாற்காலியிலேயே உயிரை விட்டார் என்று கண்கலங்கி பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |