பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம்தான் நிக்கணும்.., நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் பேட்டி
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அதோடு, தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தை கண்டித்து அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்திகேயன் இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்திருந்தார். அப்போது அவர் சாமியை தரிசித்து விட்டு செய்தியாளர்களை சந்த்தித்தார்.
அவரிடம் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "இந்த மாதிரியான சம்பவம் இனி நடைபெற வேண்டாம் என்று தான் அனைவரும் நினைக்கிறோம். இதற்கு காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. நாம் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம்தான் நிற்க வேண்டும்.
அதற்கு பெண்களுக்கு தைரியம் வர வேண்டும். இனி இது மாதிரி நடைபெற வேண்டாம் என்று வேண்டுவோம். நானும் கடவுளிடம் அதை தான் வேண்டுகிறேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |