பாலியல் புகாரையடுத்து பெண் சிஷ்யை வீட்டில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபா எந்த தோற்றத்தில் இருந்தார்? அதிரவைத்த புதிய புகைப்படம்
பாலியல் புகாரில் சிக்கி பெண் சிஷ்யை வீட்டில் இருந்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த சிவசங்கர் பாபா, நெஞ்சுவலி எனக்கூறி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி தனிப்படை பொலிசார் விசாரணைக்காக டேராடூன் சென்றபோது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த நிலையில் டெல்லியில் பெண் சிஷ்யை வீட்டில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை பொலிசார் நேற்று கைது செய்தனர். அப்போது அவரை பார்த்து அதிகாரிகள் அதிர்ந்தனர்.
டெல்லியில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபா pic.twitter.com/XXaOf7IoA7
— Karthigaichelvan S (@karthickselvaa) June 16, 2021
காரணம் எப்போதும் தலைமுடியுடன் இருக்கும் அவர் மொட்டை தலையுடன் வேறு மாதிரி காட்சியளித்தார். பொலிசாரிடம் இருந்து தப்ப அவர் மாறுவேடத்தில் இருந்தாரா என கேள்வி எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தபின்னர், டெல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். பரிசோதனையில் சிவசங்கர் பாபாவுக்கு ஆஞ்சியோ செய்தது உறுதியாகியுள்ளது.
சிவசங்கர் பாபாவை தமிழ்நாடு அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, நேற்றிரவு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். ஆதாரங்களின் அடிப்படையில் பொலிசார் சிவசங்கர் பாபாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தான் எந்த தவறும் செய்ய வில்லை என்கிற பதிலையே சிவசங்கர் கூறி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையில் சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சிவசங்கர பாபா மொட்டை அடிச்சு பயங்கரபாபா அவதாரம் எடுத்து தப்பிக்க முயற்சி பொடனியிலடித்து கைது செய்தது காவல் துறை pic.twitter.com/Il9BBb3Ulq
— மேதகு Er Josephthinakaranpaul M.E D E.com (@Josephthinakar1) June 16, 2021