உயிருக்கு போராடும் நடிகர், நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர்! குடும்பத்தார் உருக்கமான வேண்டுகோள்
பிரபல நடிகரும், நடன இயக்குனருமான சிவசங்கர் மாஸ்டர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
நடன இயக்குனரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார்.
இவர் அலை, வரலாறு, அரண்மனை, சிவலிங்கா, கண்ணா லட்டு தின்ன ஆசையா, கஜினிகாந்த், தில்லுக்கு துட்டு 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது சிகிச்சைக்கான மருத்துவ கட்டணத்தைக்கூட செலுத்த முடியாமல் அவரது குடும்பத்தினர் தவித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சிவசங்கரின் உடல் நிலையில் மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சிவசங்கரின் சிகிச்சைக்கு பண உதவி கேட்டு அவரின் குடும்பத்தார் வேண்டுகோள் வைத்துள்ளனர்.