மகாராணியாரின் இறுதி சடங்கிற்கு ஆறு நாடுகளுக்கு அழைப்பு இல்லை.. காரணம் என்ன?
ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்க உக்ரைன் மீதான போரினால் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது
சிரியா, ஆப்கானிஸ்தான் உட்பட ஆறு நாடுகள் இறுதி சடங்கில் பங்கேற்கப் போவதில்லை என தகவல் வெளியானது
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கிற்கு ரஷ்யா உட்பட ஆறு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இன்று மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கு நிகழ்வு நடந்து வருகிறது. இந்த நிகழ்வில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
PA MEDIA
ஆனால் இதில் கலந்துகொள்ள ஆறு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. உக்ரைன் மீதான போரினால் பல நாடுகளின் எதிர்ப்பை ரஷ்யா சந்தித்து வருகிறது.
புதிய அரசராக சார்லஸ் பொறுப்பேற்றபோது ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து தெரிவித்தார். ஆனால் பிரித்தானியா - ரஷ்யா இடையேயான உறவு உக்ரைன் மீதான படையெடுப்பால் சரிந்தது.
இதனால் ரஷ்யாவின் சார்பில் யாரும் ராணியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. புடினுக்கு நெருங்கிய கூட்டாளியாக பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ கருதப்படுவதால் அவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
Alexei Nikolsky/Sputnik, Kremlin Pool Photo via AP
இதேபோல் கடந்த ஆண்டு ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து மியான்மருக்கும், சிரியா, ஆப்கானிஸ்தான், வெனிசுலா ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
எனினும் வடகொரியா மற்றும் நிகரகுவா நாடுகளுக்கு தூதரக மட்டத்தில் மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.