பிரித்தானியாவில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி: தாக்குதல்தாரியின் புகைப்படம் வெளியானது
பிரித்தானியாவில் நேற்று மாலை நடத்தப்பட்ட பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவின் Plymouth பகுதியில் நேற்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து Devon & Cornwall பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், Plymouth பகுதியில் இருக்கும் Biddick Drive பகுதியில் நடந்த தீவிர துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்கள் அனைவரும் துப்பாக்கிச் சூட்டின் காரணமாகவே உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும், இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் காரணமாக, காயமடைந்த பெண் ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் மருத்துவமனையிலே உயிரிழந்தார்.
இறந்தவர்களின் உறவினர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் Plymouth நகரில் சுமார் 200,000 க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் Johnny Mercer, இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
Plymouth-ன் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் Luke Pollard, இந்த சம்பவத்தின் விவரங்கள் மிகவும் கொடூரமானவை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவரின் பெயர் Jake Davison எனவும், அவரும் இதில் உயிரிழந்துவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.