புடின் அணுகுண்டு வீசினால் ஆறு மில்லியன் பிரித்தானியர்கள் உயிரிழப்பார்கள்: பதறவைக்கும் தகவல்
போலந்து நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ள விடயம் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
அப்படி மூன்றாம் உலகப்போர் வரும் நிலையில் புடின் அணுகுண்டு வீசுவாரானல், உடனடியாக ஆறு மில்லியன் பிரித்தானியர்கள் உயிரிழப்பார்கள் என்ற பதறவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
போரில் பிரித்தானியா இழுக்கப்படும் அபாயம்
நேற்று மதியம் 3.30 மணியளவில், ரஷ்யா வீசிய இரண்டு ஏவுகணைகள் போலந்து நாட்டில் விழுந்து வெடித்ததில் இருவர் பலியான விடயம் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
Image: NOELreports/Twitter
காரணம், போலந்து ஒரு நேட்டோ உறுப்பினர் நாடாகும். ஒரு நேட்டோ நாடு தாக்கப்பட்டால், வாஷிங்டன் ஒப்பந்தத்தில் 5ஆவது பிரிவின்படி நேட்டோ அமைப்பிலுள்ள மற்ற நாடுகள் போலந்துக்கு உதவிக்கு வரவேண்டும்.
பிரித்தானியா நேட்டோ அமைப்பில் ஒரு முக்கிய நாடு என்பதால், அதுவும் போலந்துக்கு ஆதரவாக களமிறங்கவேண்டும் என்பதால் பிரித்தானியா போருக்குள் இழுக்கப்பட்ட வாய்ப்புள்ளது.
அணு ஆயுதப் போர் வெடிக்குமானால் பேரிழப்பு ஏற்படும்
ஏற்கனவே, பிரித்தானியாவில் லண்டன் உட்பட 106 இடங்கள் ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதலுக்கு இலக்காகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் ஒரு இடமான லண்டன் மீது புடின் அணு ஆயுதம் வீசுவாரானால், பிரித்தானியாவில் ஆறு மில்லியன் பேர் உயிரிழக்கக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Image: Getty Images
அத்துடன், அணு ஆயுத வெடிப்பால் உருவான கார்பன் துகள்கள் முதலானவை சூரியனை மறைப்பதால், விவசாயம் பொய்ப்பதால், பிரித்தானியாவில் மீதமிருப்போர் பட்டினி சாவுக்கு ஆளாக 90 சதவிகித வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ள விடயம் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
Image: EyePress News/REX/Shutterstock