கனடாவின் ஆல்பர்ட்டாவில் விமான விபத்தில் 6 பேர் மரணம்
கனடாவின் ஆல்பர்ட்டாவில் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆல்பர்ட்டாவின் கல்கரிக்கு மேற்கே சிறிய விமானம் விபத்துக்குள்ளானதாக கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் வெளியிட்ட தகவலின்படி, விபத்துக்குள்ளானா விமானம், ஒரு பைலட் மற்றும் ஐந்து பயணிகளுடன், வெள்ளிக்கிழமை இரவு ஸ்பிரிங்பேங்க் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பிரிட்டிஷ் கொலம்பியாவின் சால்மன் ஆர்ம் நோக்கிச் சென்றது.
Representative Image
ஒன்ராறியோவின் ட்ரெண்டனில் உள்ள கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
ராயல் கனடிய விமானப்படை ஹெர்குலஸ் விமானம் காணாமல் போன விமானத்தைத் தேட அனுப்பப்பட்டது, அது கல்கரிக்கு மேற்கே 60 கிலோமீட்டர் (37 மைல்) தொலைவில் உள்ள போகார்ட் மலையில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விமானத்தில் இருந்த அனைவரும் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
CTV
விமானம் ஒற்றை எஞ்சின் பைபர் பிஏ-32 என்றும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Small Plane Crashes in Canada, Calgary Plane Crash, Royal Canadian Mounted Police, Canada Plane Crash