பிரித்தானியாவுக்கு புறப்பட்ட புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து விபத்து: ஆறு பேர் உயிரிழப்பு, சிலர் மாயம்
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக புறப்பட்ட சிறுபடகொன்று கவிழ்ந்ததில், ஆறு பேர் வரை பலியாகியுள்ளார்கள், சுமார் 11 பேரைக் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாலையில் நிகழ்ந்த சோக சம்பவம்
இன்று அதிகாலை, சுமார் 5.00 மணியளவில், கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்த சிறுபடகொன்றில் ஒரு கூட்டம் புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக புறப்பட்டுள்ளார்கள்.
புறப்பட்ட சிறிது நேரத்தில் வடக்கு பிரான்ஸ் கடற்கரை ஒன்றின் அருகிலேயே அந்த படகு கவிழ்ந்துள்ளது. தகவலறிந்து பிரான்ஸ் தரப்பிலிருந்து ஐந்து மீட்புப் படகுகள் ஒரு ஹெலிகொப்டர், பிரித்தானிய தரப்பிலிருந்து இரண்டு படகுகள் ஆகியவை சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.
Image: Invicta Kent Media/REX/Shutterstock
உயிரிழப்பு எண்ணிக்கை
படகு கவிழ்ந்ததில் தண்ணீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்ததாகவும், ஐந்து பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டதாகவும் முதலில் தகவல் வெளியானது. பின்னர் ஆறு பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல மீட்கப்பட்டவர்கள் மற்றும் மாயமானவர்கள் எண்ணிக்கையும் உறுதியாகத் தெரியவில்லை. படகில் 66 பேர் வரை பயணித்ததாகவும், 55 பேர் மீட்கப்பட்டதாகவும், 11 பேர் வரை மாயமாகியுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
Image: Invicta Kent Media/REX/Shutterstock
முதலில் உயிரிழந்த நபர், ஆப்கன் நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் என்றும், ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்ட அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரான்ஸ் பிரதமரான Elisabeth Borne, உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |