கனேடிய மாகாணமொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மாயம்
கனேடிய மாகாணமொன்றில் வாழ்ந்துவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேர் மாயமாகியுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மாயம்
கனடாவின் மத்திய ஆல்பர்ட்டாவில் வாழ்ந்துவந்த Winnie (39)என்னும் பெண்ணும் அவரது பிள்ளைகளான Liliane (24), Debra (18), Israel (15), Samuel (14) மற்றும் Gabriel (13) ஆகியோரே மர்மமான முறையில் மாயமாகியுள்ளார்கள்.

Alberta RCMP
Ponoka என்னுமிடத்தில் அவர்கள் வாழ்ந்துவந்த நிலையில், பிள்ளைகள் Lacombe என்னுமிடத்திலுள்ள பள்ளியில் படித்துவந்துள்ளார்கள்.

Alberta RCMP
பிள்ளைகள் பள்ளிக்கு வராததால், ஆசிரியர்கள் பொலிசாருக்கு தகவலளித்ததாலேயே இந்த விடயம் வெளியில் வந்துள்ளது.

Alberta RCMP
Winnie குடும்பத்தினருக்கு சொந்தமான கார் ஒன்று மார்ச் மாதம் 24ஆம் திகதி கால்கரியில் நிற்பதை பொலிசார் கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது, மார்ச் மாதத்திலிருந்தே அந்தக் குடும்பத்தைக் குறித்த சரியான தகவல்கள் எதுவும் யாருக்கும் கிடைக்கவில்லை.

Alberta RCMP
அந்தக் குடும்பம், வீட்டையும் காரையும் ஏன் விட்டு விட்டுச் சென்றுள்ளது, எங்கு சென்றுள்ளது என்பது தெரியாத நிலையில், பொலிசார் அவர்களை தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

Alberta RCMP

Alberta RCMP
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |