அமெரிக்காவில் ட்ரம்பால் இந்த 6 பொருட்களின் விலை அதிகரிக்கும்
அமெரிக்காவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போரைத் தூண்டும் வகையில், கனடா மற்றும் மெக்சிகோ மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரி விதித்துள்ளார்.
விலைகள் உயர வழிவகுக்கும்
கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் பொருட்களுக்கு தற்போது 25 சதவிகித வரி விதிக்கப்படும். இதற்கு பதிலடியாக கனடாவும் தனது பங்கிற்கு வரிகளை அறிவித்துள்ளது. அதேவேளை மெக்சிகோவும் உரிய பதிலடி கொடுப்பதாக கூறியுள்ளது.
உண்மையில் இந்த மூன்று வர்த்தக பங்காளிகளும் ஒருங்கிணைந்த பொருளாதாரம் மற்றும் விநியோக முறைகளைக் கொண்டுள்ளனர். அத்துடன் சுமார் 2 பில்லியன் டொலர் மதிப்புள்ள உற்பத்திப் பொருட்கள் தினசரி எல்லைகளைக் கடக்கின்றன.
வரி விதிப்பால் அமெரிக்கத் தொழில்துறையைப் பாதுகாக்க விரும்புவதாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறுகிறார், ஆனால் பல பொருளாதார வல்லுநர்கள் இத்தகைய வரிகள் அமெரிக்காவில் நுகர்வோருக்கு விலைகள் உயர வழிவகுக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
ட்ரம்பின் வரி விதிப்பால் அமெரிக்க மக்கள் இந்த 6 பொருட்களுக்கு அதிக விலை அளிக்க வேண்டியிருக்கும் என்றே கூறப்படுகிறது. இனி கார்களின் விலையில் சுமார் 3,000 டொலர் அதிகரிக்கும்.
அதாவது கார்களுக்கான உதிரி பாகங்கள் அனைத்தும் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்க எல்லைகளை பல முறை கடந்ததன் பின்னரே முழு வாகனமாக உருமாறுகிறது. Audi, BMW, Ford, General Motors மற்றும் Honda ஆகிய நிறுவனங்கள் ட்ரம்பால் பாதிக்கப்படும்.
அமெரிக்க மக்கள் விரும்பி உட்கொள்ளும் மது வகைகள் இனி அதிக விலைக்கு விற்கப்படும். பிரபலமான மெக்சிகன் பீர்களான மாடலோ மற்றும் கொரோனா ஆகியவை அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு அதிக விலையில் விற்கப்படும்.
வரி விதிப்பில் இருந்து தப்பிக்க, இனி குறைவான இறக்குமதிக்கும் சில நிறுவனங்கள் தயாராகலாம். அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் கனடாவில் இருந்து மூன்றில் ஒரு பகுதி சாஃப்ட்வுட் மரக்கட்டைகளை இறக்குமதி செய்கிறது.
எரிபொருள் விலை அதிகரிக்கும்
ட்ரம்பின் வரி விதிப்பால் முக்கிய கட்டுமானப் பொருட்களின் விலை உயரும். அடுத்து கனடியன் மேப்பிள் சிரப் விலை இனி அமெரிக்காவில் அதிகரிக்கும். கனடாவின் பில்லியன் டொலர் மேப்பிள் சிரப் தொழில் என்பது உலகின் மொத்த மேப்பிள் சிரப் உற்பத்தியில் 75 சதவிகிதமாகும்.
கனடாவில் கியூபெக் மாகாணத்திலேயே 90 சதவிகித மேப்பிள் சிரப் தயாரிக்கப்படுகிறது. இனி அதிக விலைக்கு அமெரிக்க மக்கள் மேப்பிள் சிரப் வாங்கும் நிலை வரும். மிக மிக முக்கியமாக எரிபொருள் விலை அதிகரிக்கும்.
வெளியான சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயில் 61% கனடாவில் இருந்து வந்தது.
இதன் காரணமாகவே கனேடிய எரிபொருளுக்கு 10 சதவிகித வரி விதித்துள்ளார். அமெரிக்காவில் தற்போது எண்ணெய் பற்றாக்குறை இல்லை என்றாலும், முக்கிய தேவைகளுக்கான கச்சா எண்ணெய் பெரும்பாலும் கனடாவிலிருந்தும் மெக்சிகோவிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் நிலை உள்ளது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதியை குறைக்கும் வகையில் அமெரிக்காவின் வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா முடிவு செய்தால், அது பெட்ரோலிய பம்புகளில் விலை உயர்வை ஏற்படுத்தும்.
அமெரிக்க நுகர்வோர் கணிசமான விலை உயர்வைக் காணக்கூடிய ஒரு உணவு வெண்ணெய் பழமாகும். மெக்சிகன் வெண்ணெய் பழங்கள் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க வெண்ணெய் சந்தையில் கிட்டத்தட்ட 90 சதவிகிதமாகும். வரி விதிப்பு அமலுக்கு வந்தால், வெண்ணெய் பழத்தின் விலை அதிகரிக்கும் என்று அமெரிக்க விவசாயத் துறை எச்சரித்துள்ளது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |