சிக்சர் மழை பொழிந்த குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள்! லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இமாலய இலக்கு
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியினர் 227 ஓட்டங்களை குவித்துள்ளனர்.
குஜராத், லக்னோ மோதல்
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ல்க்னொ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கும், குஜராத் அணிக்கும் இடையே குஜராத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர்.
100-run partnership comes up between Saha & Gill ??
— IndianPremierLeague (@IPL) May 7, 2023
Live - https://t.co/le9e6Qkbmi #TATAIPL #GTvLSG #IPL2023 pic.twitter.com/Imx3VlDhbf
தொடக்க துடுப்பாட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் ஷகா ஆகியோர் பவர் பிளேவில் அதிக ஓட்டங்களை குவித்தனர். 12வது ஓவர் வரை விக்கெட்டுகளை இழக்காமல் ஆடிய குஜராத் அணியின் வீரர்களான சுப்மன் கில் மற்றும் ஷகா ஆகியோர் 142 ஓட்டங்கள் குவித்தனர்.
சிறப்பாக ஆடிய ஷகா
இதனை தொடர்ந்து ஆவேஸ் கான் பந்துவீச்சில் கேட்ச் ஆன ஷகா, 43 பந்துகளில் 81 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவர் 10 போர்கள் மற்றும் 4 சிக்சர்களை விளாசியிருந்தார்.
பின்னர் களமிறங்கிய குஜராத் அணியின் கேப்டன் நிதானமாக ஆடி சூப்மன் கில்லுக்கு உறுதுணையாக நின்றார். ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்ததால் 16 வது ஓவரில் இவர்களது கூட்டணி உடைந்தது.
இவரை தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி, 12 பந்துகளில் 22 ஓட்டங்கள் குவித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமலிருந்த சுப்மன் கில் சதத்தை தவற விட்டார்.
இமாலய இலக்கு
சுப்மன் கில் 51 பந்துகளில் 94 ஓட்டங்கள் குவித்த இவர் 7 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடித்திருந்தார். இந்த நிலையில் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்கள் குவித்தனர்.
Innings Break!@gujarat_titans post a massive total of 227/2 on the board.#LSG chase coming up shortly. Stay tuned!
— IndianPremierLeague (@IPL) May 7, 2023
Scorecard - https://t.co/DEuRiNeIOF #TATAIPL #GTvLSG #IPL2023 pic.twitter.com/gZtj713tph
இந்த இமாலய இலக்கை எட்டி பிடிக்க அடுத்து களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல் ராகுல், காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக இருந்தாலும், அவ்வணி இலக்கை நோக்கி போராடுமா என லக்னோ அணி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.