ஈழ நிலத்தின் வலியை மொழியெடுத்த திரைகாவியம்! ஈழத் தமிழர்களின் வலிகளை விளக்கும் ’ஆறாம் நிலம்’ படத்திற்கு சீமான் வாழ்த்து
ஈழத் தமிழர்களின் வலிகளை விளக்கும் ஆறாம் நிலம் திரைப்படம் வெற்றியடைய சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழ் நடத்திய குறுந்திரைப் போட்டியில் ஈழத் தமிழர்களின் வலிகளை விளக்கும் ஆறாம் நிலம் வெற்றி பெற்றியிருக்கிறது.
இந்த நிலையில் அந்த திரைப்படம் வெற்றியடைய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்தியுள்ளார். இது குறித்த அவரின் டுவிட்டர் பதிவில், ஆறாம் நிலம் - ஒரு பேரினத்தின் வலி! ஈழ நிலத்தின் வலியை மொழியெடுத்து திரையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இத்திரைக்காவியம் பெரும் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ்ச்சொந்தங்கள் இத்திரைப்படத்தைக் கொண்டாட வேண்டும்.
ஆறாம் நிலம் - ஒரு பேரினத்தின் வலி!https://t.co/Wtyocz1hxu
— சீமான் (@SeemanOfficial) September 24, 2021
ஈழ நிலத்தின் வலியை மொழியெடுத்து திரையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இத்திரைக்காவியம் பெரும் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ்ச்சொந்தங்கள் இத்திரைப்படத்தைக் கொண்டாட வேண்டும்.https://t.co/g4bSbjAcFd pic.twitter.com/x68BkQbV5n
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பேரவலத்தையும் தமிழர்களுக்கு விளைந்திட்டப் பெருந்துயரத்தையும் இத்திரைப்படத்தின் வாயிலாக உலகுக்கு சொல்லியிருக்கிறார் தம்பி ஆனந்த் ராமணன்