வருங்கால கணவனை கொலை செய்த பெண்: இதற்காகத்தான் கொன்றாராம்
இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், பெண்ணொருவர் தன் வருங்கால கணவரை கோட்டை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற வழக்கு, பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
வருங்கால கணவனை கொலை செய்த பெண் மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனேயைச் சேர்ந்த கேத்தன் அகர்வால் என்பவருக்கும் சியா கோயல் (20) என்னும் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனது பிறந்தநாளைக் காரணம் காட்டி கேத்தனை கோட்டை ஒன்றிற்கு அழைத்துச் சென்ற சியா, தன் காதலனான சேத்தன் சௌத்ரி (22) என்பவருடைய உதவியுடன் அவரை பள்ளத்தில் தள்ளிக் கொலை செய்தார்.
புதிய தகவல்கள்
சியா ஏற்கனவே ஒருவரை காதலித்துவந்ததாகவும், தன் பெற்றோர் வேறொருவருடன் திருமண ஏற்பாடுகள் செய்ததால் அவரை சியா கொன்றதாகவும் செய்திகள் வெளியாகின.
திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தால் தன் பெற்றோர் வருத்தப்படுவார்கள், அவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படும் என்பதால் தான் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாக சியா கூறியதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.
அப்படியானால், பெற்றோரிடம் திருமணத்துக்கு மறுப்பு தெரிவிப்பதைவிட கொலை செய்வது எளிதா என ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்நிலையில், கேத்தனுக்கு தலை வழுக்கை என்றும், அவர் தலையில் விக் (wig) அணிந்து தன் வழுக்கையை மறைத்துள்ளது தெரியவந்ததாகவும், அதனால்தான் சியாவுக்கு அவரை திருமணம் செய்ய விருப்பமில்லை என்றும், ஆகவேதான் கேத்தனை கொலை செய்துவிட்டதாகவும் தற்போது செய்திகள் வெளியாகிவருகின்றன!
அத்துடன், சியா சேத்தன் சௌத்ரி என்பவரை ஏற்கனவே காதலித்துவந்ததாக கூறப்பட்ட நிலையில், தனக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்ட பிறகுதான் சியா சேத்தன் அகர்வாலைக் காதலிக்கத் துவங்கியதாகவும், அவர்கள் இருவரும் சேர்ந்து கேத்தனை கொலை செய்யும் திட்டத்தை வகுத்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சியா சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரைப் பார்க்க அவரது குடும்பத்தில் யாருமே வரவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |