வருங்கால கணவனை கொலை செய்த பெண் வழக்கு: இணையத்தில் தேடிய அந்த விடயம்
இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், பெண்ணொருவர் தன் வருங்கால கணவரை கோட்டை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற வழக்கில், அந்தப் பெண், ஏற்கனவே நடந்த கொலை வழக்கு ஒன்றைக் குறித்து ஆய்வு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
வருங்கால கணவனை கொலை செய்த பெண்
மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனேயைச் சேர்ந்த கேத்தன் அகர்வால் என்பவருக்கும், சியா கோயல் (20) என்னும் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனது பிறந்தநாளைக் காரணம் காட்டி கேத்தனை கோட்டை ஒன்றிற்கு அழைத்துச் சென்ற சியா, தன் காதலனான சேத்தன் சௌத்ரி (22) என்பவருடைய உதவியுடன் அவரை பள்ளத்தில் தள்ளிக் கொலை செய்தார்.
இணையத்தில் தேடிய அந்த விடயம்
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் (25) கடந்த ஆண்டு மே மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்த நிலையில், மர்மமான முறையில் காணாமல் போன ராஜா, பின்னர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

வழக்கு விசாரணையில், ராஜாவை கொலை செய்தது அவரது மனைவியான சோனம் என்பது தெரியவந்தது. அந்த வழக்கு மேகாலயா தேனிலவுக் கொலை வழக்கு என்றே அழைக்கப்படுகிறது.
விடயம் என்னவென்றால், சியா கேத்தனை கொலை செய்யும் முன், ராஜா ரகுவன்ஷி கொலை குறித்து இணையத்தில் தேடியுள்ளது அவரது மொபைல் பிரௌசிங் ஹிஸ்டரியிலிருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன், பெண்களை கைது செய்தால், அவர்களை பொலிசார் அடிப்பார்களா? பெண் கைதிகளின் சட்டப்பூர்வ உரிமைகள் என்ன என்பதைக் குறித்தும் சியா இணையத்தில் தேடியுள்ளார்.
ஆக, கேத்தனை கொலை செய்யும் முன் சியா, அது குறித்து நன்கு ஆய்வு செய்துள்ளார். ராஜா ரகுவன்ஷி வழக்கில் குற்றவாளியான சோனம் செய்த தவறு எதையும் தான் செய்துவிடக்கூடாது என்பதையும் உறுதி செய்துகொள்ள முயன்றுள்ளார் சியா.
இதற்கிடையில், சியா வீட்டிலிருந்து மற்றொரு மொபைல் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் இந்த கொலை வழக்கு தொடர்பில் என்னென்ன தகவல்கள் உள்ளன என்பதை அறிய, அந்த மொபைல் தடயவியல் ஆய்வாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |