நீங்கள் தான் அடுத்த தளபதியா?- ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்த சிவகார்த்திகேயன்
சின்னத்திரை தொகுப்பாளராக தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
தரமான படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பிடித்தமான நாயகனாக மாறியுள்ளார்.
கோட் படத்தில் விஜயுடனான இவரது கேமியோ கதாபாத்திரம் திரையரங்குகளில் விசில் பறக்க செய்தது.
இதனைத்தொடர்ந்து, இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் அமரன் படம் அக்டோபர் 31ஆம் திகதி தீபாவளியன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்திய பட பிரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயனை நோக்கி ரசிகர்கள் "அடுத்த தளபதி" என்று கோஷமிட்டனர்.
அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் கூறுகையில், "ஒரே தளபதி தான், ஒரே தல தான், ஒரே உலகநாயகன், ஒரே சூப்பர்ஸ்டார் தான். இந்த அடுத்த.. அதெல்லாம் வாய்ப்பே கிடையாது.
அவங்க சினிமாக்களில் பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்திருக்கேன், அவங்கள மாதிரி நல்ல படங்கள் பண்ணி ஹிட் கொடுத்து ஜெயிக்கணும்னு நினைக்கலாம். அவங்களாவே ஆகணும்னு நினைக்கிறது சரி கிடையாதுனு நான் நினைக்குறேன்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |