பிரித்தானியாவில் வட்டப் பாதைக்கு கீழ் கண்டெடுக்கப்பட்ட 11 எலும்புக்கூடுகள்: தெரியவந்த கடந்த கால உண்மை
பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ்ஷையர் (Cambridgeshire) பகுதியில் உள்ள வட்டப்பாதையில் 11 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கண்டெடுக்கப்பட்ட 11 எலும்புக்கூடுகள்
பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ்ஷையர் பகுதியில் சிட்டி லிங்க்(City Link) திட்டத்தின் கீழ் நடைபெற்ற கட்டுமானப் பணிகளின்போது பீட்டர்பரோவில் உள்ள குவின்ஸ்கேட் வட்டப்பாதையில் 11 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்த நிலையில், இது ஏதேனும் குற்ற சம்பவத்துடன் தொடர்புடையதா என்று விசாரணையை தொடங்கினர்.
ஆனால் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குற்றங்களுடன் தொடர்புடையது அல்ல என்றும், வரலாற்று ஆவணங்கள் படி இந்த மனித எலும்புக்கூடுகள் 19ம் நூற்றாண்டை சேர்ந்த இருகாட்டைச் சேர்ந்தது என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
கிட்டத்தட்ட 160 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல்லறையில் அடக்கம் செய்யும் நடைமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
1970 ஆண்டு கீழ்த்தள நடைபாதை அமைக்கும் பணியின் போது கல்லறையின் சில பகுதிகள் அகற்றப்பட்டன.
தற்போது கட்டுமானப் பணிகள் ஆழமாக நடைபெறுவதால் இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக பீட்டர்பரோ மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் அடக்கம் செய்யப்பட்ட எலும்புக்கூடுகள்
இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட 11 எலும்புக்கூடுகளும் உரிய மரியாதையுடன் இங்கிலாந்து திருச்சபையில் உள்ள கல்லறையில் மறு அடக்கம் செய்யப்படுவதை மாநகராட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
சிட்டி லிங்க் திட்டத்தின் கீழ் பீட்டர்பரோ ரயில் நிலையத்தில் இருந்து கவ்கேட் வழியாக நகர மையத்திற்கு நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு நேரடி வழி உருவாக்கப்பட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி Whatsapp இல் இணையுங்கள். |