முகப்பருவை குறைக்கும் Green Tea
கிரீட் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் அதை உங்கள் முகத்தில் தடவுவது இன்னும் சிறந்தது.
வீங்கிய கண்கள் மற்றும் கருவளையத்துடன் வாழ கஷ்டப்படுகின்றீர்களா? சருமத்தில் ஏதேனும் பிரச்சினை இருகின்றதா? இதை எப்படி தடுப்பது என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றீர்களா? இதற்கு எல்லாம் ஒரு தீர்வாக இருப்பது கிரீன் டீ மட்டுமே. இதை எப்படி சருமத்திற்கு பயன்படுத்தலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
1. தோல் அழற்சியைக் குறைக்கிறது
மருத்துவ நிலைகளால் ஏற்படும் எரிச்சல், சிவத்தல், வீக்கம் மற்றும் அரிப்பு ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது. உங்கள் சருமத்தில் பச்சை தேயிலை பொருட்களைப் பயன்படுத்துவது சிறிய வெட்டுக்கள், சூரிய ஒளியால் ஏற்பட்ட பிரச்சினைகளை தடுக்க உதவும்.
2. முகப்பருவை குணப்படுத்துகிறது
கிரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், முகப்பருவை குணப்படுத்தும். இது முகப்பருவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. க்ரீன் டீயை சருமத்தில் தடவும்போது, கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகளை குறைந்து ஆரோக்கியமான சருமம் கிடைக்கும். இறந்த சரும செல்களை அகற்றுவதற்கு உதவுகிறது. சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்குவதால் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
4. அடைபட்ட துளைகளை அழிக்கிறது
தேவையற்ற எண்ணெய் மற்றும் வியர்வையை வெளியிடும் போது சருமத்தில் துளைகள் ஏற்படும். அது கரும்புள்ளிகள், வெள்ளை புள்ளிகள் மற்றும் முகப்பருவை ஏற்படுத்தும். இதை தடுப்பதற்காக கீரின் டீயை பயன்படுத்துவது நல்லது.
5. முன்கூட்டிய வயதானதை எதிர்த்துப் போராடுகிறது
கீரின் டீ இறக்கும் சரும செல்களை புத்துணர்ச்சியூட்டுகிறது மற்றும் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கிறது.
6. சருமத்தை ஈரப்பதமாக்குகிறது
கிரீன் டீயில் வைட்டமின் ஈ உள்ளது. இது சருமத்தை ஊட்டமளிக்கும் மற்றும் ஹைட்ரேட் செய்யவும் உதவுகின்றது. இது சருமத்தை ஈரப்பதமாக்குவது மட்டுமின்றி, பளபளப்பாகவும் சரிசெய்கின்றது. கரும்புள்ளிகள், பரு புள்ளிகள் மற்றும் பிற தோல் எரிச்சல்களை மறைக்க உதவுகின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |