முகம் கறுத்து இருக்கா? அப்போ வாழைப்பழத்ழை இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே அனைத்து பெண்களும் கவலைப்படும் ஒரெ விடயம் முகத்தில் உள்ள கருமையை போக்க வேண்டும் என்று தான்.
ஆண்களை விட பெண்கள் தனது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
அதிலும் வெயிலில் சென்று தனது முகத்தை கெடுத்துக்கொள்பவர்களும் அதிகம். ஆகவே வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்து எப்படி சருமத்தை வெள்ளையாக்க முடியும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
பேக்கிங் சோடா பேஸ்ட்
பேக்கிங் சோடாவில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று செய்துக்கொள்ள வேண்டும். இதை சருமத்தில் பூசி 15 நிமிடங்கள் வரை வைத்து, கழுவினால் முகத்தில் மாற்றத்தை பார்க்கலாம்.
வாழைப்பழம் மற்றும் பால்
வாழைப்பழத்தை மசித்து அதில் பால் சேர்த்து, 20 நிமிடங்கள் முகத்தில் பூசி பிறகு கழுவ வேண்டும். தினமும் இரண்டு முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் பொலிவு பெறலாம்.
ரோஸ் வார்ட்டர்
ரோஸ் வார்ட்டரில் பால் சேர்த்து தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பாக பூசி, காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள கருமை நீங்கு முகம் பொலிவு பெறும்.
கற்றாழை ஜெல்
கற்றாழையில் உள்ள ஜெல்லை பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் தினமும் முகத்தில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி முகம் அழகாக இருக்கும்.
மாம்பழத் தோல்
மாம்பழத்தின் தோல் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதை குறைந்தது 15 நிமிடங்களாவது வைத்து பின் கழுவினால், கருமையான சருமம் பொலிவு பெறும்.
தேன்
தேன், எலுமிச்சை மற்றும் தயிர் சேர்த்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து, கழுவினால் ஆரோக்கியமாக சருமத்தை பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |