வயதானாலும் பொலிவான சருமத்துடன் இருக்கனுமா? இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க போதும்...
பொதுவாகவே பெண்ணாக பிறந்துவிட்டாலே அனைவருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்று மட்டும் தான் தோன்றும்.
அதற்காக பல விடயங்கள் செய்து பார்ப்பார்கள். கடைகளில் கிரீம் மற்றும் பலவிதமான Face pack ஆகியவற்றை வாங்கி பயன்படுத்திக்கொள்வார்கள்.
அதில் கிடைப்பது எல்லாம் தீமைகள் மட்டும். எப்போதும் இயற்கையான முறையில் தான் நமது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதையும் தாண்டி ஏதாவது செய்ய நினைத்தால் அது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
மஞ்சளானது பொதுவாகவே கிருமிகளை அழகாக்கக்கூடிய சக்திக் கொண்டது. மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் உள்ளதால் அலர்ஜி மற்றும் முக வீக்கம் போன்றவையை போக்குகிறது. மேலும் முகப்பொலிவை தருகிறது.
ஆகவே வீட்டில் இருந்தபடியே எப்படி முகத்தை எளிய முறையில் பொலிவு பெற செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
கடலை மாவு அல்லது பாசி பருப்பு மாவு :50 கிராம்
-
சுத்தமான மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
-
பன்னீர் சிறிதளவு
- தண்ணீர் அல்லது பால் தேவையான அளவு
செய்முறை
-
முதலில் கடலை மாவுடன் மஞ்சள் தூளை கலக்க வேண்டும்.
- பால் அல்லது தண்ணீர் ஊற்றி கலந்துக்கொள்ள வேண்டும்
. - இறுதியாக பன்னீர் தெளித்து எடுத்தால் பேஸ்ட் ரெடி.
- இதை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி 20நிமிடங்களின் பின்னர் கழுவ வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |